கொக்கட்டிசோலையில் இந்திய பிரபல பாடகர் ரி.எல்.மகராஜன் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி

(படுவான் பாலகன்) பிரபல தமிழக  இசைக்கலைஞரும் பாடகருமான ரி.எல்.மகராஜன்   சதாவின் சூப்பர் சங்கீத் இசைக்குழுவினருடன் இணைந்து  பக்திப்பாடல்களுடன்  இசை நிகழ்ச்சி இன்று இரவு (17.09.2016) கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மாலை 7.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 18ஆம் திகதி பிற்பகல் 04 மணிக்கு தேரோட்டம் இடம்பெறவிருக்கிறது.


பிரபல பாடகர் ரி.எல்.மகராஜனின் இன்னிசை நிகழ்வு இறுதித்திருவிழாவை சிறப்பிக்குமுகமாக நள்ளிரவு வரை இடம்பெறவிருக்கிறது.

இன்றைய உபயகாரர்களான உலகிப்போடி குடியினருடன் இணைந்து முதலைக்குடா அமரர் ஆறுமுகம் சிவஞானம் குடும்பத்தினர் இந்த இசைவிழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.

எனவே பக்தர்கள் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம் என ஏற்பாட்டுக்குழு சார்பில் அதிபர் சிவ.அகிலேஸ்வரன் தெரிவித்தார்.