அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலிருந்து அம்பாறை 3ஆம் கட்டைப் பகுதிக்கு கஞ்சாவைக் கொண்டுசென்றதாகக் கூறப்படும் 16 வயதுடைய சிறுவனை அரசடி மேம்பாலத்துக்கு அருகில் சனிக்கிழமை (03) நள்ளிரவு கைதுசெய்த பொலிஸார், இச்சிறுவனிடமிருந்து 10 கஞ்சா பக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அரசடி மேம்பாலத்துக்கு அருகில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இச்சிறுவனை வழிமறித்துச் சோதனையிட்டனர்.
இதன்போது, குறித்த சிறுவனிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்பதுடன், இச்சிறுவனிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.