கிழக்கு மாகாணத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டுகோள்

கிழக்கு மாகாணத்தில், சர்வதேச விமான நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

இந்த விமான நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைக்கும் புணானைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைய வேண்டும் என்ற சாத்தியவள அறிக்கையையும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் நாங்கள் சமர்ப்பித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.


இதன் மூலம் உல்லாசத் துறையினை ஊக்கவித்து மாகாண இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கும் பங்களிப்பு நல்க முடியும் எனவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.