(ஜெய்ஷிகன்)
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு
பேத்தாழை பொது நூலகத்தில் பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இன்றும் (12.10.2016)
கல்குடா
வலயம் மற்றும் மட்டக்களப்பு மத்திய வலய பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப்
போட்டி என்பனவும் இடம் பெற்றது.பேத்தாழை பொது நூலக நூலகர் திரு. வே.கேதாதரன்
தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் நூலக உத்தியோகத்தர்களுடன் வாசகர் வட்ட
உறுப்பினர்களும் இணைந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
















