(ஜெ.ஜெய்ஷிகன்)
தேசிய ஆவணவாக்கல் சபையினால் கடந்த 2004ஆம் ஆண்டு
தொடக்கம் ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு
மாதமாக அரசால் தேசிய வாசிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பொது நூலகங்கள்
மற்றும் பாடசாலைகளிலுள்ள நூலகங்களிலும் வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வினை
ஏற்படுத்தும் வகையில் இம் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு பேத்தாழை பொது நூலகத்தில் பல நிகழ்வுகள்
இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில்
இன்றும் (13.10.2016)
கல்குடா வலயம் மற்றும் மட்டக்களப்பு
மத்திய வலய பாடசாலைகளின் இடை நிலைப் பிரிவு மற்றும் உயர் நிலைப் பிரிவு மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, வினாவிடை
போட்டி, என்பனவும் இடம் பெற்றது.
பேத்தாழை பொது நூலக நூலகர் திரு. வே.கேதாதரன் தலைமையில் இடம்
பெற்ற இந் நிகழ்வில் நூலக உத்தியோகத்தர்களுடன் வாசகர் வட்ட உறுப்பினர்களும்
இணைந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.



















