விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்
களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிலிவுக்குட்பட்ட எருவில் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் எருவிலைச் சேர்ந்த கணேசமூர்த்தி (வயது 70) என்பவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திவந்த களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த வடிவேல் கிருஸாந்த் (வயது 18) என்பவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்













