மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்/திராய்மடு தமிழ் வித்தியாலயம் வரலாற்றில் முதல் முறையாக புலமை பரீட்சையில் 169 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளது. தரம் 5ல் கல்வி பயிலும் செல்வன் றபிக்ஷன் என்பவரே இப் புள்ளியினை பெற்றுள்ளார். இதே வேளை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 4 மாணவர்கள் 100 மேற்பட்ட புள்ளிகளையும் 8 மாணவர்கள் 70 மேற்பட்ட புள்ளிகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விடயம்.மேற் குறிப்பிட்ட பாடசாலையில் தரம் 5ல் ஆசிரியையாக மிக கரிசனையுடன் கடமையாற்றிய திருமதி சுஸ்தா-தயாளன் என்பவரையும் அதனுடன் உறுதுணையாக நின்ற சக ஆசிரியைகளையும் பாராட்டுவதுடன் அதிபர் திரு கந்தையா-சிவக்கொழுந்து அவர்கள் கடமையை பொறுப்பேற்று ஒரு வருட காலத்துக்குள் இவ் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












