(துறையூர் தாஸன்)
சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் அதிகாரிகளின் அனுமதியுடனும் Kolan Global Corporation வேண்டுகோளுக்கமையவும் கொரிய நாட்டு விசேட சத்திர சிகிச்சை நிபுணர் குழுவினர் கண் மற்றும் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கென புதன்கிழமை அன்று (28.09.2016)இ கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தனர்.கொரிய மருத்துவக் குழுவினரைஇ கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இராசரத்தினம் முரளீஸ்வரன் வரவேற்று மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து வைத்திய அத்தியட்சகரின் தலைமையுரையினை அடுத்து கொரிய நாட்டு விசேட சத்திர சிகிச்சை மருத்துவரின் சிறப்பு உரையினைத் தொடர்ந்து இரத்த வங்கிப் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஸின் நன்றியுரையுடன் ஆரம்ப நிகழ்வு நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் சத்திர சிகிச்சைக்கென வந்திருந்த நோயாளர்கள் வைத்திய நிபுணர்கள் சிரேஸ்ட வைத்திய அதிகாரிகள் உள்ளகப் பயிற்சி வைத்தியர்கள் நிர்வாக உத்தியோகத்தர் பொது முகாமைத்துவ உதவியாளர்கள் தாதிய பரிபாலகி தாதிய சகோதரிகள் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் சிற்றூழிய மேற்பார்வையாளர்கள் சுகாதார உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்துகொண்டனர்.
கண் மற்றும் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கென Dr.Young Hoon Ohh ,Dr.Eung Jin Shin,Dr.Eun Soo Park, Dr.Eung Suk Lee,Dr.Seok Hwan Kim ஆகிய விசேட வைத்திய நிபுணர்களும் Mr.Jeong Jin In, Miss So Yeon ,Miss.Su Jung Kimபோன்ற தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட வைத்தியக் குழாமினரால் இச்சத்திர சிகிச்சைகள் நடாத்தப்பட்டன.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பொது சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஆர்.நிமலரஞ்சன் மற்றும் மயக்க மருந்து வைத்திய நிபுணர் டாக்டர் சி.தேவகுமார் ஆகியோரின் பங்களிப்புடனும் இச்சத்திர சிகிச்சை முகாம் நடைபெற்றது.
பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைகள் பதினைந்து(15) நோயாளிகளுக்கும் கண் சத்திர சிகிச்சைகள் 39 நோயாளிகளுக்குமாக 54 நோயாளர்களுக்கு சத்திர சிகிச்சைகள் மேற்க்கொள்ளப்பட்டன.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இலவச சத்திர சிகிச்சை வைத்திய முகாமை நடாத்துவதற்காக கொரிய நாட்டு வைத்தியக் குழுவினால் இலங்கை நாட்டின் பெறுமதியின்படி அறுபத்தேழு இலட்சம் ரூபா, செலவிடப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
வைத்திய அத்தியட்சகரினாலும் மயக்க மருந்து வைத்திய நிபுணரினாலும் மற்றும் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஸ் அவர்களினாலும் கொரிய நாட்டு வைத்தியக் குழுவினர்களுக்கு நினைவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.


































