மட்டு மேற்கு கல்வி வலயத்தில் மண்முனை தென்மேற்கு கோட்டம் முதலிடம்

(படுவான் பாலகன்) புதன்கிழமை வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 51மாணவர்கள் பெற்று சித்தியடைந்துள்ளனர். 

மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர்பற்று மேற்கு ஆகிய கோட்டங்களை உள்ளடக்கிய மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் மண்முனைதென்மேற்கு கோட்டத்திலே 31மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்து வலயத்தில் முதலிடத்தினையும் குறித்த கோட்டம் பெற்றுள்ளது.


குறித்த வலயத்தில் அதிககூடிய புள்ளியாக 176ஐ கன்னங்குடா கண்ணகி வித்தியாலய மாணவி சச்சுதானந்தன் ~ஜாணி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  மேலும் மண்முனை மேற்கு கோட்டத்தில் 15மாணவர்களும், ஏறாவூர்பற்று மேற்கு கோட்டத்தில் 05மாணவர்களும் மாவட்டவெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.