(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக குடிநீரின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச சபையால் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது.
பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கும், பாடசாலைகளுக்கும் நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டு அவற்றின் ஊடாக குடிநீர் வழங்கப்படுகின்றது.
பிரதேசத்தின் கச்சக்கொடி சுவாமி மலை, மாவடி முன்மாரி, கற்சேனை, அம்பிளாந்துறை மேற்கு, அம்பிளாந்துறை வடக்கு, கடுக்காமுனை, வால்கட்டு, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, குளுவினமடு, விடுதிக்கல் போன்ற கிராமங்களுக்கும், வரட்சியால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கும் தினமும் 48,000 லீற்றர் குடிநீர் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ஒரு நாளைக்கு 8,000 லீற்றர் வீதம் இரு தினங்களும் 16,000 லீற்றர் குடிநீர் செவ்வாய்,வெள்ளி ஆகிய கிழமைகளில் தொடர்ச்சியாக கெவுளியாமடு கிராம மக்களுக்கு நீர்த்தாங்கிகள் வைத்து வழங்கப்பட்டு வருவதாகவும் சபையின் செயலாளர் குறிப்பிட்டார்.


















