வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பல்வேறுபட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் சமுகப் பாதுகாப்புத் திட்டமும் ஒன்றாகும்.
இதனூடாக இன்று 27ஆம் திகதி வவுணதீவு பிரதேசத்திலுள்ள கரவெட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை இருதயராஜா எனும் பயனாளி ஒருவருக்கு தனது மகளின் மரணச் செலவுக்கான கொடுப்பனவினை பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி திணைக்கள உத்தியோகத்தர்கள் மரணவீட்டுக்கே சென்று வழங்கிவைத்தனர்.
சாதாரணமாக மரணம் இடம்பெற்று ஒரு சில நாட்களிலேயே இக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் இக் கொடுப்பனவு மரணச் செலவுக்காக பிரேதம் மயானத்திற்கு கொண்டு செல்ல முன்னரே இக் குடும்பத்திற்கு மேற்படி 15,000/= பணம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












