சர்வதேச சிறுவர் தினத்தையும், தேசிய வாசிப்பு மாதத்தினையும் முன்னிட்டு கதை கூறல், சிறுவர்களுக்கான திரைப்படங்கள் காண்பித்தல் நிகழ்வுகள்

(ஜெ.ஜெய்ஷிகன்)
சர்வதேச சிறுவர் தினத்தையும், தேசிய வாசிப்பு மாதத்தினையும் முன்னிட்டு நேற்று (01.10.2016) பேத்தாழை பொது நூலகத்தில் சிறுவர்களுக்கான பல நிகழ்வுகள் இடம்பெற்றன. பேத்தாழை பொது நூலக நூலகர் திரு. வே.கேதாதரன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் இங்கு எதுவித கட்டணங்களும் அறவிடாமல் சிறுவர்களை நூலக அங்கத்தவர்களாக இணைத்துக் கொண்டதோடு, கதை கூறல், சிறுவர்களுக்கான திரைப்படங்கள் காண்பித்தல் போன்ற பல நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.