அம்பிளாந்துறையில் சிறுவர் தின நிகழ்வு

(படுவான் பாலகன்) சர்வதேச சிறுவர் தினத்தினை சிறப்பித்து சிறுவர், முதியோர் தின நிகழ்வுகள் அம்பிளாந்துறை கலைமகள் பாலர் பாடசாலையில் இன்று(01) இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு நிகழ்வு இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 


அம்பிளாந்துறை சிவமுத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையின் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், அதிபர்கள், பெற்றோர்கள், பாலர்பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.