
கல்குடா கல்வி வலயத்தால் நடாத்தப்பட்ட வலயமட்ட சிறுவர் விளையாட்டுப் போட்டியில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலாம்; இடத்தைப் பெற்றுள்ளனர். இச் சாதனையை நிகழ்த்திய மாணவர்களுக்கு கல்லூரியில் அண்மையில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிபர் அ.ஜெயஜீவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதி அதிபர்களான திருமதி.அருந்ததி சுந்தரமூர்த்தி, பாலமுரளி மற்றும் ஆசிரியர்கள், பெற்றார்கள் சகிதம் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்படுவதனை காண்க.