(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கனிஸ்ட வித்தியாலத்தில் ஆசிரியர் தின நிகழ்வு இன்று(24) திங்கட்கிழமை வித்தியாலய அதிபர் க.தவராசா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஆசிரியர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் தரம் 5ல் கற்று தரம் ஆறில் கற்பதற்காக வேறுபாடசாலைக்கு செல்லும் 50மாணவர்களும் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டது. இவர்களுக்கான நினைவுச்சின்னங்களை அம்பிளாந்துறை ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரர் ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபையினர் வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.












