மட்டக்களப்பில் பிரபல பேச்சாளர் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் "புதிய வெளிச்சம்" நிகழ்வு - Motivational Speech Event

(ஆர்.சயனொளிபவன்  )
தமிழகத்தை சேர்ந்த  உலக பிரபல பேச்சாளர் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள்   கலந்துகொண்ட  "புதிய வெளிச்சம் " எனும் ஊக்கமூட்டும் பேச்சு ( Motivational Speech ) நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு  தேவநாயகம் அரங்கில் இடம்பெற்றது .
இதன்போது  மாணவர்களுக்கென தனியாக சிறப்புரை ஒன்றையும் வழங்கியதுடன் மாணவர்களின்  கேள்விகளுக்கு  பதிலளித்திருந்தார்.

கனடாவை சேர்ந்த நவஜீவன் அனந்தராஜ் இன் ஏற்பாட்டில்  வடக்கு கிழக்கில் நடைபெற்றுவரும் இந்த   "புதிய வெளிச்சம் "  நிகழ்வை மனித நேயக் கரங்கள் அமைப்பினர் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்திருந்தனர் .

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மனநல வைத்திய நிபுணர் கடம்பநாதன் , வைத்தியர் சுகுணன் ,  வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன்   உட்பட பலர் கலந்து கொண்டனர்

பேராசிரியர் ஆற்றிய உரையின்  காணொளி நாளை பதிவேற்றப்படும்