(எப்.முபாரக் )
ஊடகவியலாளர்களுக்கு இந்நல்லாட்சியில் சுதந்திரமாக செய்தி சேகரிக்கவோ,எந்த இடத்திற்கும் சென்று வரவோ,வெள்ளைவேனுக்கு பயப்படாமலே உங்களது பணிகளை மேற்கொள்ள இந்த அரசு வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கருணாரத்தின பரணவித்தாரன தெரிவித்தார்.
இலங்கை பத்திரிகைப் பேரவையும்,பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சும் இணைந்து மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டரை இன்று சனிக்கிழமை (1) திருகோணமலை ஜேகாப் பார்க் விடுதியில் நடைபெற்ற போதே பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:இன்று நாட்டில் குழப்பக் கூடிய ஒரு சில தீய சக்திகள் இருந்து கொண்டே இருக்கின்றார்கள் ,தீய சக்திகள் இனிமேலாவது தீய எண்ணங்களை மறந்து செயற்பட வேண்டும். நாட்டில் முப்பது வருடமாக புரையோடிப் போயிருந்த யுத்தம் முடியுற்று மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
தகவல் அறியும் சட்டமும், உரிமையும் மிகவும் இன்றியமையாததாகும், ஊடகவியலாளர்களின் பணிகள் மிகவும் முக்கியமாகும் நாட்டில் ஒரு இடத்தில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமிடத்து அதனை வெளிக்கொணரவே ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்களே தவிர அதனை சீர் செய்து நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவது கிடையாது,இவ்வாறு ஊடகவியலாளர்கள் மேற்கொள்ளாவிடின் எவ்வாறு சமூக நல்லினக்கத்தினை ஏற்படுத்த முடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.
அத்தோடு நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த செய்திகளை வெளியிடுவதன் மூலமே அந்த தகவல்கள் மக்களைச் சென்றடையும் என்றார்.