மட்டக்களப்பில் மீண்டும் தலையெடுத்துள்ள வாள் வெட்டு தாக்குதல் ! ஒருவர் படுகாயம்


எஸ்.-அபிவரன்-
மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில்; வாள் வெட்டுக் குழுவினர் நடாத்திய வாள் வெட்டுத் தாக்குதலில் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பதற்றமும் ஏற்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்

இது பற்றி தெரியவருவதாவது 

கடந்த 6 மாதத்திற்கு முன்னர் குறித்த பகுதியிலுள்ள கோவில் உற்சவ காலத்தின்போது பெண்கள் மீது அநாகரிகமாக நடந்து கொண்ட சில இளைஞர்களை கோவில் உற்சவகாலத்தில் தொண்டாற்றிய அப்பகுpயைச் சேர்ந்த சிலர் அவர்களை பிடித்து கண்டித்தனர்.

இதனையடுத்து தங்களை கண்டித்தவர்களை பழிவாங்கும் முகமாக  சம்பவதினமான நேற்று இரவு 8.30 மணியளவில் தங்களை கண்டித்தவர்கள் சில இளைஞர்களுடன்; மாரியம்மன் கோவில் வளாகபகுதியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் கையில் வாள்களுடன் சென்ற 10 பேர் கொண்ட பழிவாங்கும்  குழுவினர் திடீரென சென்று அங்கிருந்த தங்களை கண்டித்த ஒரு இளைஞனின் பெயரை கூறி அழைத்து பொல்லால் தாக்;கினர் இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தாக்குதல் நடாத்திய இடத்திற்கு சென்றபோது அதில் பழிவாங்கவேண்டியவர் இன்னொருவர் இருப்பதை கண்டு அவர் மீது பழிவாங்கும்  குழுவினர் தலையிலும் முதுகிலும்; வாளால் வெட்;டி தாக்குதல் நடாத்திவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் 

அதனைத் தொடர்ந்து வாள்வெட்டுக் குழுவினர் அப்பகுதியிலுள்ள கங்கானிப் பிள்ளையார் ஆலயப்பகுதில் வீட்டுக்கு அருகில் உள்ள கடை ஒன்றின் முன்னாள் நின்ற தங்களை கண்டித்த இன்னொருவர் மீது பொல்லுகளால் தாக்குதல் நடாத்திவிட்டு அங்கிருந்து அந்த குழுவினர் தப்பி ஓடியுள்ளனர் இதனையடுத்து அப்பகுதில் பெரும் பதற்றம் ஏற்பட்டது 
இவ் வாள் வெட்டுத் தாக்குதலில் நாவற்குடா பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான தர்மதாசா பிரதீபன் படுகாயமடைந் நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இவ் வாள்வெட்டு குழுவின் பிரதான சூத்திரதாரி மாமாங்கப்பகுதியைச் சேர்ந்தவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் அவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அக்குழுவினரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்