( ஆர்.சயனொளிபவன், சிவம் , பழுலுல்லாஹ் பர்ஹான் ) இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு 34 ஆவது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன .திருகோணமலை, அம்பாரை, மட்டக்களப்பு பொலிசாரின் விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டதோடு விளையாட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.
பொலிஸ் மா அதிபரின் சேவையைப் பாராட்டி கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க, மட்டக்களப்பு வர்த்தக சங்கம், இஸ்லாமிய நலன்புரி வர்த்தக சங்கத்தினர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தனர்
பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், சீ. யோகேஸ்வரன், எஸ். கோடீஸ்வரன், அலிசாகிர் மௌலனா, கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம், வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாண சபை உறுப்பனர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள' உள்ளி;ட்ட பலர் கலந்து கொண்டனர்.














































