(ஜெ.ஜெய்ஷிகன்)
நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வநாயகம் ஸ்ரீகிருஸ்ணராஜா கௌரவ அதிதிகளாக செங்கலடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சௌ.சிவநேசராஜா மற்றும் வைத்திய கலாநிதி கி.வினோதாஸ் சிறப்பு அதிதியாக கோறளைப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம் விசேட அதிதியாக ஓய்வு நிலை ஆரம்;பப் பிரிவு ஆசிரியை பவானிதேவி கனகசிங்கமும் அழைப்பு அதிதிகளாக கணக்காளர்களான தயானி சசிகுமார் மற்றும் வினோத், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றார்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கோறளைப்பற்றுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட 16 பாடசாலைகளைச் சேர்ந்த 102 மாணவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர். கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம், தொழிநுட்பம் போன்ற பாடத்துறைகளில் சாதனை படைத்து பல்கலைக்கழகத்திற்;கு தெரிவான 33 மாணவர்களும் க.பொ.த சாதாரண தரத்தில் பாடசாலை ரீதியில் முதன்மைப் பெறுபேறுகளைப் பெற்ற 19 மாணவர்களும் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 41 மாணவர்களும் மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் சாதனை படைத்த 09 மாகாண, மாணவியர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் ஓய்வு நிலை ஆரம்;பப் பிரிவு ஆசிரியை பவானிதேவி கனகசிங்கம் நீண்ட காலமாக கல்லூரிக்கு ஆற்றிய சேவைக்காக 2001 பழைய மாணவர் வட்டத்தினால் விசேட விருது வழங்கி கௌரவிக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது.












