மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தில் தாய்ப்பால் புரைக்கேறியதால் 3 மாதங்களேயான குழந்தை செவ்வாயக்கிழமை அதிகாலை (29.11.2016) மரணித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தளவாய், அம்மன்கோயில் வீதியைச் சேர்ந்த விஜயகாந்த் தனுக்ஷன் எனும் ஆண் குழந்தையே இவ்வாறு மரணத்தைத் தழுவியுள்ளது.
குழந்தை அழும்போது தாய் பால் அருந்தக் கொடுத்து பிள்ளையை படுக்கையில் போட்டுவிட்டு காலையில் எழுந்து பார்த்தபோது குழந்தை மரணித்து விட்டிருந்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் குழந்தையின் சடலம் நல்லடக்கத்திற்காக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.













