உள்நாட்டு சமுதாயங்களை அபிவிருத்தி செய்வதற்கு இளைஞர்களை வலுவூட்டும் அமெரிக்கத் தூதரகம்

அமெரிக்க  தூதரகத்தின் வருடாந்த இளைஞர் வலுவூட்டல் நன்கொடை நிகழ்ச்சியின்  ஒரு பகுதியாக எட்டு உள்நாட்டு சிவில் சமூக நிறுவனங்களுக்கு ரூ. 9,000,000.00 (அண்ணளவாக 60,000 அமெரிக்க டொலர்கள்)இனை அமெரிக்கத் தூதரகம் வழங்குகின்றது.

சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதில் இருந்து, தலைமைத்துவப் பயிற்சியை வழங்கல், பால்நிலை சமத்துவத்தை  முன்னிறுத்தல்  மற்றும்  ஒதுக்கப்பட்ட சமுதாயங்களின்உரிமைகள் மேம்படுத்தல்  என, இலங்கையில் மாற்றத்தை  ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ததுள்ள இளைஞர்சார் குழுக்களுக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கத் தூதரகம் பெருமை கொள்கின்றது.'


என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகாரங்களுக்கான அதிகாரி ஜேம்ஸ்ரூஸோ  தெரிவித்தார்

சமுதாய அபிவிருத்தி , சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நல்லிணக்கம ;, மனித உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை விருத்தி செய்தல் என்பவற்றை இலக்கு வைத்த நிகழ்ச்சிகளுடனான பல்வேறு பிரேரணைகளில் இருந்து எட்டு வெற்றி பெறுனர்கள் இவ்வருடத்திற காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நூற்றிற்கும் மேற்பட்ட  நிகழ்ச்சி த ; திட்டங்களுக்கு 2010 தொடக்கம் மொத்தமாக சுமார் ரூ. 135 மில்லியனை (சுமார் 900,000 அமெரிக ;க டொலர்) இளைஞர் வலுவூட்டல் நன்கொடை நிகழ்ச்சி  ; ஊடாக அமெரிக்கத் தூதரகம் வழங்கியுள்ளது.