மட்டு. இலங்கை விமானப்படை முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த கலை விழா!

மட்டக்களப்பு விமானப்படையினரின் நிருவாகத்தின் கீழ் இயங்கிவரும் முன்பள்ளி நிலைய மாணவர்களின் வருடாந்த கலை விழா நிகழ்வு  28.11.2016ஆம் திகதி திங்கட்கிழமை, மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (Govt.Agent. Mrs.P.S.M.Charles), சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு விமானப்படை தள கட்டளை தளபதி புத்திக பியசிறி  ( wing commander Buddhika Piyasri )  உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் பரிசு வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றது.

சமுக சேவையினை நோக்காகக் கொண்டு கடந்த 2013ஆம் ஆண்டு (2013 January) ஆரம்பிக்கப்பட்ட இந் நிலையத்தில்  இன மத சாதி வேறுபாடின்றி அனைத்து சிறுவர்களையும் உள்ளவாங்கிக் கொண்டு விமானப் படையினரின்(SLAF) நிருவாகத்தின் கீழ் இந்த முன்பள்ளி நிலையம் செயற்பட்டு வருகின்றது.

இங்கு கல்வி பயிலும் சிறார்களுக்கு முன்பள்ளி பாடசாலை சீருடை, புத்தகங்கள் உள்ளிட்ட கற்கை உபகரணங்களை விமானப் படையினரே (SLAF) இலவசமாக வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.