காஷ்மீரின் துஜ்ஜார் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி பதுங்கியிருந்த வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அங்கு பதறியடித்து ஓடி வந்த தீவிரவாதியின் தாய், மகனிடம் 5 மணி நேரம் மன்றாடினார். இறுதியில் தாய்ப் பாசத்தால் அந்த தீவிரவாதி சரண் அடைந்தார்.
வடக்கு காஷ்மீரின் துஜ்ஜார் பகுதியைச் சேர்ந்தவர் உமக் காலிக் மிர். 12-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர் கடந்த மே மாதம் வீட்டை விட்டு வெளியேறினார். காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற அவர், லஷ்கர் இ-தொய்பா தீவிர வாத இயக்கத்தில் இணைந்தார்.
கடந்த 6 மாதங்கள் அங்கு தீவிரவாத பயிற்சி பெற்ற அவர் அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பி ஒரு வீட்டில் பதுங்கி இருந்தார். இதுகுறித்து உள்ளூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு போலீஸார், சிஆர்பிஎப் மற்றும் ராணுவ வீரர்கள் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர்.
முதல்வர் மெகபூபா முப்தியின் அறிவுரையின்பேரில் மனிதாபி மான அடிப்படையில் தீவிரவாதி உமக் காலிக் மிர் சரண் அடையு மாறு ஒலிபெருக்கியில் அறிவிக் கப்பட்டது.
இதனிடையே தகவல் அறிந்து உமக் காலிக் மிர்ரின் பெற்றோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ராணுவத்தின் அனுமதி பெற்று அவரின் தாயார் அந்த வீட் டுக்குள் சென்றார். அங்கு மகனிடம் 5 மணி நேரம் அழுது மன்றாடினார்.
இறுதியில் தாய்ப்பாசம் காரண மாக காலை 10 மணிக்கு பாது காப்புப் படையினரிடம் உமக் காலிக் மிர் சரண் அடைந்தார். தன்னிடம் இருந்த ஏ.கே.ரக துப்பாக்கி, கையெறி குண்டுகள், ரேடியோ தொலைத்தொடர்பு சாதனத்தையும் ஒப்படைத்தார்.
இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி கூறியபோது, இது எங் களுக்கு மிகவும் சிக்கலான தருணம். ஒரு பெண் மற்றும் வீரர் கள் சிலரின் உயிரைப் பணயம் வைத்து சமரச முயற்சியில் ஈடுபட் டோம். இறுதியில் தாய்ப் பாசம் வென்றுவிட்டது என்று தெரிவித்தார்.
அந்த இளைஞர் உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட் டார். அவர் மீது குறைந்தபட்ச நட வடிக்கை மட்டுமே எடுக்கப்படும் என்று போலீஸார் உறுதியளித் துள்ளனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













