வீரம் விளை நிலமான மட்டக்களப்பு மண்ணில் வாகரை கதிரவெளியில் மாவீரர் நினைவு தினம் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரிய தளமாக அமைந்த நூற்றுக்கணக்கான மாவீரர்களை வழங்கிய வாகரைப்பகுதியில் கதிரவெளிப் பிள்ளையார் கோவிலில் பல மாவீரர்களை ஈன்ற தாய்மார்,தகப்பன்மார்,உறவுகள் கண்ணீர் மல்க மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டு விளக்கேற்றி ,மாவீரர்களை நினைத்து உரை நிகழ்த்தினார்.
















