கண்டியனாறு குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

(படுவான் பாலகன், எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை கண்டியநாறு குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம்இரவு(12ஆம் திகதி) மீட்கப்பட்டுள்ளது. 

கண்டியனாறு குளத்திற்கு மீன்பிடிக்கச்சென்ற ஒருவரே குளத்தின் சேற்றில் புதைந்துண்டு  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உயிரிழந்தவர் 72வயதினையுடைய சில்லுக்கொடியாறு கிராமத்தினைச் சேர்ந்த 12பிள்ளைகளின் தந்தையான வீரக்குட்டி வேலாப்போடி என இனங்காணப்பட்டுள்ளார்.  

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.