கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் கல்லடி கடல்மீன்கள் அணி சம்பியன்

கால்பந்தாட்ட நடுவர் அமரர்.ஜீ.டபிள்யூ.பிரபாகரன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் கல்லடி கடல் மீன்கள் அணி சம்பியனாகியது.

மட்டக்களப்பு கால்பந்தாட்ட சங்கமும் கால்பந்தாட்ட மத்திஸ்தர்  சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய இப் போட்டியில் 12 கழக அணிகள் பங்குகொண்டன. இப் போட்டியின் இறுதிச் சுற்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (30ஆம் திகதி ) இடம்பெற்றது.

இதில், கல்லடி கடல் மீன்கள் அணிக்கும் கல்லடி, டச்பார் இக்னேசியஸ் அணிக்குமிடையே மோதல் இடம்பெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரத்தில் இரு அணிகளாலும் எதுவித கோல்களும் போட முடியாமல் போனதால் தண்டனை உதை போட்டி மூலமாக கல்லடி கடல் மீன்கள் அணி வெற்றிபெற்று சம்பியனானது.

இப் ­போட்­டியின் சிறந்த வீர­ராக இக்­னே­சியஸ் விளை­யாட்­டுக்­ கழகம் சார்பில் அஸ்மோவும் சிறந்த கோல் காப்­பா­ள­ராக கடல்­மீன்கள் விளை­யாட்­டுக்  கழகம் சார்பில் ஜீவராஜ் ஆகியோர் தெரி­வு­ செய்­யப்­பட்டனர்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், கால்­பந்­தாட்ட மத்திஸ்தர் சங்க தலைவர் பாரூக்  உள்ளிட்டோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசில்களை வழங்கிவைத்தனர்.