மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் நிதி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு

(கே.எஸ்.பி.ராஜா)
கிழக்கு மாகாண தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலை அதிபர்களுக்கு பாடசாலை நிதி முகாமைத்துவம் தொடர்பான இருநாட்கள் கொண்ட செயலமர்வு நேற்றயதினம் 01ஆம் திகதி நிறைவுபெற்றது.


கன்னங்குடா மகாவித்தியாலயம், குறிஞ்சாமுனை பாடசாலைகளில் கடந்த 31ஆம்,01மே் திகதிகளில் இடம்பெற்ற இச் செயலமர்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன், ஆசிரியர் சங்க பிரதம செயலாளர் எஸ்.ஜெயராஜா உள்ளிட்ட கல்வித் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


இதில் பாடசாலை நிதி நடவடிக்கைகள், நிதியினை கையாளுதல், அறிக்கையிடல், பதிவுகள் மேற்கொள்ளல் உள்ளிட்ட நிதி விடயங்கள் தொடர்பாக பயிற்சிகள் இடம்பெற்றது.

இதன்போது வளவாளர்களாக பிரதம கணக்காளர் (கிழக்கு மாகாண) திருமதி.இ.மோகன், சம்மாந்துறை கல்வி வலய கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி கிழக்கு மாகாண கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.