மாகாணசபை உறுப்பினர் முயற்சியால், தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்திற்கு புதிய மயானம் அமைத்துக் கொடுக்க ஏற்பாடு

(சுரேந்திக்கா)
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட தேற்றாத்தீவில் குடியிருப்பு கிராமத்தில் பொது மயானம் இன்மையால் அப்பகுதி மக்கள் சிரமப்படுவது தொடர்பாக  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களின் கவனத்திற்கு கொண்வரப்பட்டதையடுத்து இதற்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக அவர் குறித்த பிரதேசத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டபின், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலாளர், மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரையும் திங்களன்று (31ஆம் திகதி) அப்பகுதிக்கு அழைத்துச் சென்று நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டு, இங்குள்ள அரச காணியொன்றில் சேமக்காலையினை மிக விரைவாக அமைத்துத் தருவதாக கூறினர்.

இக் கிராம மக்கள் சடலங்களை 3கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்வதாகவும் மக்கள் கவலை தெரிவித்தனர்.