மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் மூலம் மட்டக்களப்பு சிவில் பிரஜைகளின் விஷேட கலந்துரையாடல் எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடுப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டாளரும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபைத் தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவித்தார்.
பட்டிப்பளை, ஓட்டமாவடி, செங்கலடி ஆகிய பிரசேங்களில் உள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் குறித்த காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாகவும் அவர் கூறினார்.
இதன்போது தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலைமாறு கால நீதி நடவடிக்கைகளையும், உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளையும் பற்றி தெளிவுபடுத்திக் கொள்வதற்காக மேற்படி பிரதேச மட்ட சிவில் சமுகத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் அவர்கள் தங்களின் கருத்துக்களை வழங்க முடியும் என்று எதிர்பார்பப்தாகவும் அவர் கூறினார்.
இச்சந்திப்பில் ஆர்வமும் விருப்பமும் கொண்ட மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல் சாராத சிவில் சமுகங்களின் தலைவர்கள் 077 7679596 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது குறுந்தகவல் செய்வதன் மூலமோ தங்களது விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்ளலாம்.
ஒரு அமைப்பில் இருந்து ஒருவர் மட்டுமே பங்குபற்ற முடியும். மூவினத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம்.













