பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சூரசம்கார நிகழ்வு

(ஜெ.ஜெய்ஷிகன்)
கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் சூரசம்கார நிகழ்வு நடைபெற்றது.

அந்த வகையில் வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீமுருகன் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது வசந்த மண்டப பூசை இடம்பெற்று பின்னர் சுவாமி உள்வீதி வலம் வந்து பின்னர் சுவாமி வெளி வீதி வந்து சூர சம்கார நிகழ்வு நடைபெற்றது.

கடந்த 31ம் திகதி ஆரம்பமான கந்தசஸ்டி விரதமானது சனிக்கிழமை மாலை சூரம் போர் இடம்பெற்றதுடன், ஞாயிற்றுக்கிழமை பாரணை பூசையுடன் விரதம் நிறைவடைந்தது.

இங்கு இடம்பெற்ற பூசைகள் யாவும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.என்.சண்முகதாஸ் குருக்கள் தலைமையில் சூரசம்கார நிகழ்வுகள் நடைபெற்றது.