பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு.

(செங்கலடி நிருபர் சுபஜன்)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்க
ப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், அந்த கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஷ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா என்றழைக்கப்படுகின்ற கனநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் ஆகியோரே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.