மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச கலாசார விழா - படங்கள்

(ஆயித்தியமலை நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச கலாசார விழா மண்முனை மேற்கு பிரதேச கலாசாரப் பேரவையின் எற்பாட்டில் வியாழக்கிழமை பிற்பகல்  (17ஆம் திகதி) பிரதேச செயலக மண்டபத்தில் வெகு சிறப்புடன் இடம்பெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச செயலக கலாசார உத்தியேதகத்தர் எம்.சிவானந்தராஜாவின் ஒருங்கமைப்பின்கீழ் மேற்படி நிகழ்வுகள் இடம்பெற்றது.

பாரம்பரிய கலாசார நிகழ்வுகளுடன் இடம்பெற்ற இவ் விழாவில் கலைஞர்கள் கௌரவிப்பு மற்றும் இவ்வாண்டில் இடம்பெற்ற மக்கள் இசை  கலை நிகழ்வில் தெரிவான கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும் இதன்போது இப் பிரதேச பாடாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு பலகலைக்கழக மொழித்துறை தலைவர் திருமதி றூபி வலன்டினா பிரான்சிஸ், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன்,மண்முனை மேற்கு பிரதேச வைத்திய அதிகாரி எஸ்.இளங்கோ, ஓய்வுபெற்ற இந்து சமய கலாசாரத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ்.தெய்வநாயகம், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் வணக்கத்திற்குறிய சுவாமி பிரபு பிறேமானந்த ஜி மஹாராஜ், பிரதேச சபை செயலாளர் ரி.புத்திசிகாமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.