குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

(ஆயித்தியமலை நிருபர்)
மட்டக்களப்பு, உறுகாமம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை, இன்று திங்கட்கிழமை 21ம் திகதி  சடலமாக மீட்கப்பட்டதாக, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். 

உறுகாமம், பாரதிபுரத்தைச் சேர்ந்த பழனிவேல் மனோகரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை மாலை மீன்பிடிக்கச் சென்ற வேளை இவர் காணாமல் போயிருந்தார், நிலையிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டார்.


இன்று காலை உறுகாமம, கித்துள் ஆகிய மீனவ சங்கங்களின் உறுப்பினர்கள் தோணிகளில் சென்று தேடுதலில் ஈடுபட்டபோது குளத்தின் மத்திய பகுதியில் இவரது சடலத்தை கண்டுபிஇக்கப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது.

இவரது மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.