கியூபா நாட்டு முன்னாள் ஜனாதிபதியும் கம்யூனிச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மரணத்திற்கு கிழக்கு மாகாண சபையில் அஞ்லிசலி செலுத்தப்பட்டுள்ளது.கிழக்கு மாகாணசபையின் 66 ஆவது அமர்வின் போதே அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சரால் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொண்டமைக்கு அமைய சபையில் உள்ள அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட அஞ்சலியை செலுத்தினார்கள்.













