(ஜெ.ஜெய்ஷிகன்)
பேத்தாழை பொது
நூலகத்தின் 2016 ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத போட்டி
நிகழ்வுகளின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று (05.12.2016) பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில்
இடம்பெற்றது.
திரு. வே.
கேதாதரன் தலைமையில் இடம் பெற்ற இவ் விழாவில் சிறப்பு அதிதியாக கோறளைப்பற்று
பிரதேச சபையின் செயலாளர் ஜனாப். எஸ்.எம். சிஹாப்தீன் மற்றும் அதிதிகளாக கிழக்குப்
பல்கலைக்கழக சிரேஸ்ட உதவி நூலகர் திரு.எம்.என். ரவிக்குமார், கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கோறளைப்பற்று பிரதேச சபையின் சனசமூக
உத்தியோகத்தர் எஸ். குகனேசன், நூலகங்களுக்கு
பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.நிரோசிதன், வாழைச்சேனை பொது நூலக நூலகர் K.ருத்திரன், இணைய தொழில் நுட்பவியலாளர் Y.பிறேமானந், சுற்றுலா விடுதி உரிமையாளர் சங்க பிரதிநிதி
த.தஜிதரன், நந்தவனம்
சுற்றுலா விடுதி உரிமையாளர் பா.நிரோசன், நன்கொடையாளர் திருமதி ஜெ.அல்லிராணி போன்றோர்
கலந்து கொண்டனர்.
தேசிய
வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஒக்டோபர் மாதம் முழுவதுமாக பேத்தாழை
பொது நூலகத்தில் கல்குடா கல்வி வலயம் மற்றும் கோறளைப்பற்று மத்திய கல்வி வலயம்
உள்ளடங்கலான பாடசாலை மாணவர்களுக்கு இடையிலே நடாத்தப்பட்ட அனைத்து போட்டி
நிகழ்வுகளுக்குமான பரிசில்கள், சான்றிதழ்கள்
என்பன வழங்கப்பட்ட இந் நிகழ்வில் வாழைச்சேனை இந்துக் கல்லூரி மற்றும் பேத்தாழை
சந்திரகாந்தன் வித்தியாலய மாணவர்களது நடனங்களும் இந் நிகழ்வினை அலங்கரித்தன. பேத்தாழை பொது
நூலகத்தின் விபுலானந்தா வாசகர் வட்டம், ஆலோசனைக் குழு ஆகியோரின் உதவியுடன் நூலகர் மேலும் இந்த நூலகத்தின் வளர்ச்சியில்
பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் அதிதிகளை பாராட்டி நினைவுச் சின்னங்களும்
வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




























