கிழக்கிலங்கையில்
பிரசித்திபெற்ற தயா ஆடைத் தொழிற்சாலைகளில் நிலவுகின்ற உடனடி வெற்றிடங்களை
நிரப்பும்பொருட்டு தயா கூட்டு நிறுவனங்களின் மனிதவள முகாமைத்துவப் பிரிவால் ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத் திட்டமிடல் பிரிவோடு இணைந்து நடாத்தப்படவுள்ள நேர்முகப் பரீட்சையானது
எதிர்வரும் 19-12-2016, திங்களன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர்
கூடத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறவுள்ளது.
இத்துறையில்
தங்களது கல்வித் தகைமைகளுக்கேற்ற தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பும் 18 - 40 வயதுக்குட்பட்ட
ஆண், பெண் இருபாலாரும் தமது கல்வி மற்றும் ஏனைய சான்றிதழ்களின் மூலப்பிரதிகளுடன்
குறித்த நேர்முகப் பரீட்சைக்குத் தவறாது சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நேர்முகப்
பரீட்சையில் தெரிவுசெய்யப்படுவோர் உடனடித் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதோடு
தங்களுக்கான தொழில் பற்றிய விபரங்களையும் அங்கேயே அறிந்துகொள்ளமுடியும் என
ஆலையடிவேம்பு பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.சந்திரபவன்
தெரிவித்துள்ளார்.
எனவே இத்துறையில்
ஆர்வமுள்ள தொழில்வாய்ப்பற்ற படித்த தமிழ் இளைஞர் யுவதிகள் இச்சந்தர்ப்பத்தைத்
தவறவிடவேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.













