(படுவான் பாலகன்) அம்பிளாந்துறை கலைமகள் பாலர் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்களுக்கான முன்பள்ளி கற்கை சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை ஆலய பரிபாலன சபையின் தலைவர் சி.தவராசா தலைமையில் பாலர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது 2017ம் ஆண்டு பாடசாலையில் இணைக்கப்படவுள்ள மாணவர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலைநிகழ்வுகள் பலவும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.கணேஸ் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

















