வாகரைப்பிரதேச இளைஞர்கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று எச். ஐ.வி எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

(ஜெ.ஜெய்ஷிகன்)
வாகரைப்பிரதேச இளைஞர்கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வேள்ட் விசன் வாகரை திட்ட அனுசரணையுடன் இன்று எச். ஐ.வி எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

செ.சத்தியனின் தலைமையில் நடைபெற்ற இவ் விழிப்புணர்வு ஊர்வலம் கதிரெவளி மற்றும் பனிச்சங்கேணி ஆகிய இடங்களில் இருந்து காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி வாகரைப்பிரதேச செயலகத்தை வந்தடைந்தது. அங்கு பிரதேச செயலாளர் செல்வி. இராகுலநாயகி அவர்கள் சம்பிரதாய சந்திப்புக்களை மேற்கொண்டார். பின்னர் கண்டலடியில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில்  இளைஞர்களுக்கு எச். ஐ.வி எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் எச். ஐ.வி எய்ட்ஸ் பரிசோதனை என்பன மட்டக்களப்பு மாவட்ட பாலியல் நோய்ப்பிரிவு வைத்திய நிபுணர் மற்றும் ஊழியர்களினால் நடாத்தப்பட்டு விழிப்புணர்வு ஊட்டப்பட்டது.