நத்தார் பண்டிகையையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று(25.12.2016) மூன்று கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறிய குற்றங்களுக்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த மூன்று பேர் இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் வழங்கியுள்ள பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் கே.எம்.எச்.யு.அக்பர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் கே.எம்.எச்.யு.அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் மற்றும் ஜெயிலர் ஏ.மோகன் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் முன்னிலையில் இம் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.












