ஏறாவூரில் டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி இன்று 10.12.2016 காலை 9 மணியளவில் இடம்பெற்றது. சலாமா கலாசார பேரவையின் ஏறாப்பாட்டில் பிரதேச செயலகம், நகரசபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பொலிஸ்திணைக்களம் இணைந்து இவ் விழிப்புணர்வு பேரணியை நடாத்தியது . பேரணியில் ஏறாவூர் பிரதேச செயலாளர் , நகரசபை செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள், சிறுவர்கள் கலந்து கொண்டிருந்தனர். பேரணியில் கலந்துகொண்ட சிறுவர்கள் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான பதாதைகளை தாங்கியிருந்தனர். ஏறாவூர் பிரதான வீதி நகரசபைக்கு முன் ஆரம்பமாகிய இப் பேரணி ஏறாவூர் கலாசார மண்டபம் வரை சென்றது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












