வீடமைப்பு
மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினூடாக சீமெந்துப்
பூச்சு வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் வறிய
குடும்பங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான இலவச சீமெந்துப் பொதிகளை
வழங்கிவைக்கும் மூன்றாம் கட்ட வைபவம் இன்று (28) காலை ஆலையடிவேம்பு பிரதேச
செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச
செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின்
தொழில்நுட்ப உத்தியோகத்தர் என்.சுதர்சனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில்
மொத்தம் 52 பயனாளிகளுக்கு 500 சீமெந்துப் பொதிகள் பகிந்தளிக்கப்பட்டன.
இவ்வைபவத்தில்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனைப் பிராந்திய உதவி முகாமையாளர்
திருமதி. வை.யோகராணி, திவிநெகும கருத்திட்ட முகாமையாளர் எம்.கண்ணதாசன், கிராம
உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ, பிரதம முகாமைத்துவ
உதவியாளர் கே.ஹேந்திரமூர்த்தி மற்றும் பதவிநிலை உதவியாளர் ஏ.எல்.எம்.பஸீல் ஆகியோர்
அதிதிகளாகக் கலந்துகொண்டிருந்தனர்.
இது
குறித்துக் கருத்துத் தெரிவித்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆலையடிவேம்பு
பிரதேசத்துக்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர் என்.சுதர்சன், குறித்த
வேலைத்திட்டத்தின் முதலாங்கட்ட சீமெந்துப் பொதிகள் இவ்வாண்டு மே மாதத்திலும்,
இரண்டாம் கட்டமாக செப்டெம்பர் மாதத்திலும் வழங்கிவைக்கப்பட்டிருந்ததாகத்
தெரிவித்ததோடு, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மொத்தமாக இவ்வருடம் 136
குடும்பங்களுக்கு 1300 சீமெந்துப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அங்கே குறிப்பிட்டார்.












