(சித்தா)
கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. செ. சிறிகிருஸ்ணராசா அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக கல்குடா கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கே.யோகராசா தலைமையில் மட்/செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் 2017 ஆம் ஆண்டிலிருந்து தரம் 2 இல் நடைமுறைப்படுத்தவேண்டிய புதிய கல்விச் சீர்திருத்தச் செயலமர்வு நடைபெற்றது.
இச் செயலமர்வினை கல்குடா முகாமைத்துவத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.தி.ரவி ஆரம்பித்து வைத்தார். அத்துடன் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. செ. சிறிகிருஸ்ணராசா அவர்கள் செயலமர்வு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து ஆசிரியர்களை ஊக்குவித்தார். இந் நிகழ்வில் கல்வி அபிவிருத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சா.ரவிராஜா கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.


















