புத்தாண்டில் மண்முனைப் பாலத்தின் மின்குமிழ் ஒளிரும்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு மற்றும் மண்முனைப்பற்று பிரதேசங்களின் எல்லைகளில் அமைந்துள்ள மண்முனை பாலத்தின் மின்குமிழ் புதிய ஆண்டிலிருந்து ஒளிருமென மண்முனை தென்மேற்கு பிரதேசசபை செயலாளர் ஜோன்பிள்ளை குமுதா குறிப்பிட்டார்.


மண்முனை தென்மேற்கு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று(30) வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது மின்குமிழ் தொடர்பில் பிரதேச அமைப்புக்கள் கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்து பேசுகையிலேயே இதனை தெரிவித்தார்.

பழுதடைந்துள்ள மின் இணைப்புக்களை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய ஆண்டில் இருந்து மின்குமிழ் ஒளிரும் பொருட்டு தமது வேலைகளை துரிதப்படுத்தி செய்துவருவதாகவும் கூறினார்.

குறித்த மண்முனைப் பாலத்தின் மின்குமிழ் பல மாதங்களாக ஒளிராமை குறித்து   மண்முனை பற்று மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டங்களில் பல தடவை பேசப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.