நான்காவது இளைஞர் பாரளமன்ற தேர்தலில் பட்டிருப்புத்தொகுதியில் இருந்து செல்வன் குணரெட்னம் துசாந்தன் வெற்றிவாகை சூடினார்.

(லோ.ரேவநிசாந்)
இன்றைய  இளைஞர்களே  நாட்டின்  நாளைய தலைவர்கள்  என்பதில்  எதுவித ஐயமுமில்லை.நாடாளவியரீதியில் இளைஞர்,யுவதிகளின் பலத்த எதிர்பார்ப்பு களுக்கு மத்தியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ,இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் , தேசிய கொள்கை திட்டமிடல்  பொருளாதார அபிவிருத்தி அமைச்சு  ஏற்பாட்டில் 2017- 2018 ஆண்டுக்கான நான்காவது இளைஞர் பாரளமன்ற தேர்தல்  18.12.2016 அன்று  ஞாயிற்றுக்கிழமை  225 உறுப்பினர்களை தெரிவு  செய்வதக்காக  நாடுபூராகவும் 670 மத்திய நிலையங்களில் சிறப்பாக இடம்பெற்றது.

மண்முனை தென்எருவில் பற்று ,போரதீவுப்பற்று ,மண்முனை தென்மேற்கு பிரேதேச செயலாளர் பிரிவை உள்ளடக்கிய  பட்டிருப்புத்தொகுதியில் இருந்து ஒரு உறுப்பினரே தெரிவு செய்யப்படும் நிலையில் 11 வேட்பாளர்கள்  போட்டியிட்டு இருந்தனர். இவர்களில் மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட செல்வன் குணரெட்னம் துசாந்தன் அவர்கள் 1223 வாக்குகளை பெற்று  வெற்றிபெற்றுள்ளார்.