வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் இன்று ஒளிவிழா

(ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் இன்று(01) வியாழக்கிழமை ஒளிவிழா நிகழ்வு கல்லூரியின் முதல்வர் அ.ஜெயஜீவன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் கரையரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக புனித பரியோவான் ஆலயத்தின் குருவானவர் வண.தயாளன் , சிறப்பு அதிதியாக இரட்சணியசேனை கப்டன் ஐ. குணசீலன்  அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நத்தார் பாடல்கள், பாலன் பிறப்பு, கிறிஸ்மஸ் தாத்தா வருகை என்பன இடம்பெற்றது. நிகழ்வுகளை கல்லூரியின் கிறிஸ்த்தவ மாணவர் ஒன்றியம் ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடத் தக்கது.