'நான் நற்பண்புள்ளதொரு சாரதியாவேன்' வவுணதீவு பொலிஸாரால் வீதி விபத்துக்களை தடுக்கும் வேலைத்திட்டம்.

( ஆயித்தியமலை நிருபர்)

'பாதுகாப்பாக வாகனத்தைச் செலுத்துவோம்'; எனும் தொனிப்பொருளில்  வீதி விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸாரால் புதன்கிழமை (28ஆம் திகதி ) முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் சாரதிகளை விழிப்பூட்டலுடனும் அவதானத்துடனும் எப்போதும் இருக்கும் வண்ணம்  'நான் நற்பண்புள்ளதொரு சாரதியாவேன்' என்ற  வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டன.

மேலும் வவுணதீவு பிரதானவீதியில் வீதி விபத்துக்'களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பதாதையும் நடப்பட்டது.


வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர், போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.அபேரட்ண உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.