உதயம் 'விழிப்புலன் அற்றோர்' நிறுவனத்திற்கு 'கைமுறை சிகிச்சை தொழில் பயிற்சி வழங்குவதற்கான உத்தியோக பூர்வ ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது


நேற்று (22-12-2016) காலை 11.00 மணியளவில்  கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் உதயம் எனப்படும் 'விழிப்புலன் அற்றோர்' நிறுவனத்துக்குமான 'கைமுறை சிகிச்சை' தொடர்பான தொழில் பயிற்சி வழங்குவது என்பவற்றுக்கான உத்தியோக பூர்வ ஒப்பந்தம் ஒன்று கல்லடி மட்டக்களப்பில் அமைந்துள்ள கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் பிராந்திய அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

 இத்திட்டத்தின் மற்றும் இரு பங்குதாரர்களாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் திரு.ம.உதயகுமார் அவர்களும், கல்குடா பாசிக்குடா விருந்தக உரிமையாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு.வை.சிவாகர் அவர்களும் கையொப்பமிட்டனர்.


இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வூஸ்க் நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய அணித்தலைவர் திரு.ம.யோகேஸ்வரன் விழிப்புலன் அற்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட இளைஞர் யுவதிகளுக்கான இந்த 'கைமுறை சிகிச்சை' எனப்படும் 04 மாதங்களைகக் கொண்ட பயிற்சி நெறி ஒன்றை ஆரம்பித்துள்ளதையும், இதற்குரிய கட்டட வசதியை மாநகர ஆணையாளர் அரசடியில் அமைந்துள்ள ஆயுர்வேதிக் சிகிக்சை நிலைய கட்டத்தில் வழங்கியுள்ளார்.

அத்தோடு இப்பயிற்சி நிறைவில் இதில் பயிற்றப்பட்டவர்களுக்கான தொழில் வழங்குவதற்கான உத்தரவாதத்தினை கல்குடா பாசிக்குடா விருந்தக உரிமையாளர்கள் ஒன்றியம் முன்வந்துள்ளது என்றும் குறிப்பிட்டு நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாநகர ஆணையாளர் தனது உரையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 7000 இத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தேவைகளில் இத்திட்டம் நமது வரலாற்றில் மிக முக்கியமான தென்றாகும்.

இப்பயிற்சிக்காக மாநகர சபைக்குட்பட்ட கட்டடம் ஒன்றை 05 வருடங்களுக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும், இப்பயிற்ச்சி முடிவில் இவர்கள் மட்டக்களப்பு பஸ்நிலையம், சுற்றுலாப் பயணிகள் தகவல் நிலையம் மற்றும் மட்டக்களப்பு நகரில் பிரபல்யமான இடங்களில் இவர்களின் கைமுறை சிகிச்சை நிலையங்களை திறந்து நடாத்துவதற்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த 'கைமுறை சிகிச்சை' பயிற்சி நிலையத்தில் தற்போது மாற்றுத் திறனுள்ளவர்கள் (ஆண்.பெண்) பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் உதயம் விழிப்புலன் அற்றோர் சங்க பிரதிநிதிகளும், உதயம் நிறுவத்தின் கொள்ளளவை கட்டியெழுப்புதல் மற்றும் அவர்களை நிறுவனமயப்படுத்தல் செயற்திட்டதிற்கு ஆலோசகராக வூஸக் அமைப்புடன் இணைந்து செயற்படும் திரு.இரகுராமமூர்த்தி அவர்களும் மற்றும் வூஸ்க் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திருமதி. பொ.புவனேஸ்வரி, மாவட்ட சமூகசேவை திணைக்களத்தின் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.அன்ரனிதாஸ், கல்குடா பாசிக்குடா விருந்தக உரிமையாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு.சிவாகர், உதயம் நிறுவனத்தின் உத்தியோகத்தர் திரு. கிருஸ்ணகுமார் அவர்களும் உரையாற்றியதுடன் ஏனைய வூஸ்க் நிறுவனத்தின உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட உதயம் நிறுவனம் இத்திட்டதின் மூலமாக அபிவிருத்தி அனுகு முறை  என்னும் நடைமுறைகளை பின்பற்றி பாரிய மாற்றத்தை  நோக்கி செல்கின்றது.
'அனுதாபம் வேண்டாம் ஆதரவு தாரீர்' என்பது இவர்களது நிறுவனத்தின் தொனிப்பொருளாகும்.