அந்த வீதியில் வசிக்கும் முஹம்மத் ஜலால்தீன் முஹம்மத் சியாம் (வயது 25) என்ற இளைஞனே தனது 5 ஆடுகள் சனிக்கிழமை திருடப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
இச்சம்பவம்பற்றி மேலும் தெரிவயவருவதாவதுளூ கடையொன்றில் கூலித் தொழில் செய்து வரும் மேற்படி இளைஞன் தனது தாயினதும் தங்கையினதும் மேலதிக வாழ்வாதாரத்திற்காக சிறுகச் சிறுகச் சேமித்து இந்த ஆடுகளை வாங்கி வளர்த்து வந்ததாகவும் வழமைபோன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை இந்த ஆடுகளைப் பராமரித்து விட்டு சனிக்கிழமை அதிகாலை மீண்டும் ஆடுகளுக்கு இலைகுழைகள் போடுவதற்காக ஆட்டுக் கொட்டிலைப் பார்த்தபோது அவை திருடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
திருடப்பட்ட 5 ஆடுகளின் பெறுமதி சுமார் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா எனவும் அவர் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஸ்தலத்திற்கு விரைந்த காத்டதான்குடி குற்றப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.












