(படுவான் பாலகன்) நுண்கடன் நிதி நிறுவனங்களின் அதிகரிப்பினால் நுண்கடன் நிறுவனங்களின் இலகுநடைமுறைகளுக்குள் மயங்கி நுண்கடனினை பெற்று மீண்டுவரமுடியாத நிலையில் துன்பங்களை அனுபவித்துவரும் மக்களை விழிப்பூட்டும் வகையிலான வீதியோர நாடகம் பட்டிப்பளை, கொக்கட்டிச்சோலை ஆகிய இடங்களில் நேற்று(15) வியாழக்கிழமை இடம்பெற்றது.
வேள்ட்விஸன் நிறுவனத்தின் பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் நிகழ்த்தப்படும் குறித்த நாடகம், மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட கிராமங்களில் தொடர்ச்சியாக அளிக்கை செய்யப்படவுள்ளது.
குறித்த நாடகத்தினை இ.குகநாதன் நெறியாழ்கை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.















